தூத்துக்குடி 2018 டிசம்பர் 12 ;தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் வல்லநாட்டில் நடைபெற்ற மனுநீதி நாள் நிகழ்ச்சியில் 99 பயனாளிகளுக்கு ரூ.18.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் வல்லநாட்டில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (12.12.2018) நடைபெற்றது. இம்முகாமில் 99 பயனாளிகளுக்கு ரூ.18.12 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன். முன்னிலை வகித்தார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது:-
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது:-
தமிழக அரசு மாவட்ட தலைநகரில் இருந்து தொலை தூர கிராமத்து மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட அலுவலர் கிராமங்களுக்கு வந்து அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவைகளை தீர்த்து வைக்கும் மனுநீதி நாள் முகாம்களை நடத்திட உத்தரவிடப்பட்ட தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மனுநீதி நாள் முன் கோட்டமாக ஒரு மாத காலத்திற்கு முன்னதாக இங்குள்ள பொது மக்களிடம் மனுக்களை பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே பெறப்பட்ட 181 மனுக்களை இதில் 112 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. 69 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக இங்கு எடுத்து கூறியுள்ளனர். வருவாய் துறையின் மூலம் பொதுமக்களின் சிரமத்தை போக்கிட இ சேவை மையம் மூலம் 20க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மேலும் இ – அடங்கல் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. இன்று நடைபெறும் விழாவில் வருவாய் துறையின் மூலம் 74 நபர்களுக்கு ரூ.10.72 இலட்;சம் மதிப்பிலும், வேளாண்மை, தொட்டக்கலை, ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகள் மூலம் 25 நபர்களுக்கு ரூ.7.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 99 நபர்களுக்கு ரூ.18.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயண்படுத்தும் பிளாஸ்டிக் பயண்பாட்டினை முற்றிலும் தடைசெய்யப்படும் என தெரிவித்துள்ளர்கள் சுற்றுச்சூழலை மிகாம் பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிற்போம். எல்லோரும் துணிப்பைகளையே பயண்படுத்த வேண்டும், எப்போதும் துணி பையை வைத்திருக்க வேண்டும். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் இதற்கு முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும் எனப் பேசினார்.

இம்முகாமில் உதவி ஆட்சியர் பயிற்ச்சி டாக்டர்.அனு , உதவி இயக்குநர் ஊராட்சிகள் உமாசங்கர், மாவட்ட சமுக நல அலுவலர் தனலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, குழந்தைகள் ஊட்டச்சத்து திட்ட மாவட்ட திட்ட அலுவலர் முத்து லெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பால சுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன், துணை வட்டாட்சியர் சந்தர ராகவன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.