திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுபாலத்தில் இன்று அதிகாலை மயில ஒன்று அடிப்பட்டு உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை கண்ட பொதுமக்கள் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர்.
பசுமை தமிழ் தலைமுறை அமைப்பை சேர்ந்த வல்லநாடு பூல்பாண்டியன் உடனடியாக களத்திற்கு சென்று மயில் குறித்த விவரங்களை வல்லநாடு வன சரக வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக வந்த வனத்துறை ஊழியர்கள் மயிழை மீட்டு வல்லநாடு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் மயிழை பராமரிப்பு செய்ய வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.