
செய்துங்கநல்லூர் அருகே விவசாயிகள் பயன்படுத்தும் வயற்காட்டுக்கு செல்லும் இடத்தில் பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்தில் தூதுகுழி வடிகால் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் 7 வது அணைக்கட்டான மருதூர் அணைக்கட்டில் பிரியும் மருதூர் மேலக்காலில் வெள்ளக்காலங்களில் உபரி தண்ணீரை இந்த கால்வாய் வழியாகத்தான் திறப்பார்கள். மேலககால்வாயில் இருந்து உபரியாக விடப்படும் தண்ணீர் முத்தாலங்குறிச்சிக்கும் & கருங்குளம் கிராமத்துக்கு இடையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட வடிகாலில் மழைக காலங்களில் வெள்ளம் செல்கிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்யும்போது மறுகரைககு விவசாயிகள் கடகக முடியாத அளவுககு வெள்ளம் செல்கிறது. அந்த சமயத்தில் இருகரையில் உள்ள வயல் வெளிகள் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும். வடிகாலுககு மறு கரையில் உள்ள வயல் வெளிகளில் வாழை, பூ, நஞ்சை பயிரிட்டு வருகிறார்கள். இந்த பயிருக்கு தினமும் இடுபொருள் கொண்டு செல்லவேண்டும், விளைபொருள்களை எடுத்து வரவேண்டும். இந்த விவசாயிகள் சாதரண காலங்களில் தலை சுமையாக சுமந்து தூதுகுழி வடிகாலை கடந்து தான் இக்கரைக்கு வருவார்கள். வெள்ளம் வந்து விட்டால் இவர்கள் கரையை கடக்க முடியாது. எனவே விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். விளைநிலங்களில் பொருள்களை கொண்டு செல்ல முடியவில்லை.
செய்துங்கநல்லூர் பஞ்சாயத்தில் உள்ள மக்களுக்கு ஒரு காலத்தில் இறுதி கால ஈடுகாடு தாமிரபரணி ஆற்றங்கரையில் தான் இருந்தது. இங்கு செல்ல மழைக்காலங்கள் தோது படாத காரணத்தினால் இந்த ஈடுகாட்டை முழுவதும் மறந்து விட்டனர். இந்த பகுதியில் ஒரு காலத்தில் கள்ளிகாடு என்ற கிராமம் இருந்தது. தொடர்ந்து ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தினால் இந்த ஊர் மக்கள் தற்போது கருங்குளம் பகுதியில் குடியேறிவிட்டனர் இவர்களின் குலதெய்வமான கூழையாற்று சுடலை, பேச்சியம்மன் உள்பட பல ஆலயங்கள் இந்த பகுதியில் தான் உள்ளன. தூதுகுழி வடிகால் இல்லாத காரணத்தினால் பல கிலோ மீட்டர் சுற்றி தான் இவர்கள் ஆலயத்துக்கு வருகிறார்கள். வடிகாலில் வெள்ளம் வந்தால் கோயிலுக்கு வரஇயலாது.
எனவே தூதுகுழி வடிகாலில் பாலம் கட்டினால் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து அண்ணாநகர், சந்தையடியூர், கரையடியூர், மேல தூதுகுழி, கீழ தூதுகுழி, எஸ்.என்.பட்டி, அய்யனார்குளம் பட்டி, கருங்குளம், முத்தாலங்குறிச்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள்.
இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும் போது, மக்களுக்கு மிகவும் தேவையான இந்த பாலத்தினை கட்ட வேண்டும் என எங்கள் பகுதி மக்கள் கடந்த 50 வருட காலமாகபோராடி வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக இந்த பாலத்தினை கட்டி தரவேண்டும் என்று கூறினார்.
இப்பகுதி மக்கள் பிரச்சனை தீர உடனடியாக தூதுகுழி வடிகாலில் பாலம் அமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.