கருங்குளத்தினை சேர்ந்த பனைதொழிலாளிக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.
கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி(65). பனை தொழிலாளி. இவர் பனை ஓலையில் தாஜ்மகால், ஆலயம், கோவில், யானை, கலப்பை மாடு, மனைவியுடன் விவசாயி உள்பட பல்வேறு பொருள்களை தயார் செய்து வருகிறார். இவருக்கு யூனிவர்செல்ஸ் புக் ஆப் ரிக்கார்டு சான்றிதழும் சர்வதேச பல்கலைகழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. சென்னை அண்ணாநகரில் வைத்து இந்த பட்டம் வழங்கப்பட்டது.
பட்டத்தினை பெற்று கருங்குளம் வந்த அவரை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பல்வேறு அமைப்பினர் பாராட்டினர்.


