செய்துங்கநல்லூர் பைத்துல்மால் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
பைத்துல்மால் தலைவர் யாசர் அரபாத் தலைமை வகித்தார். ஜமாத்தலைவர் முகம்மது அலி, காஜா முகைதீன், சேக் அக்பர்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அல்தாப், சலீம், அசார், முந்தஸீர், பாசித், ஆதீப், ஜாவித், கோதர், அப்துல்காதர், அசன், மும்மது , ரியாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் பைத்துல்மால் சார்பில் அதன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.