பக்கபட்டியில் திமுக சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு மக்களிடையே குறைகள் கேட்டார்.
இந்த கூட்டத்தில் ஊராட்சி திமுக செயலர் முருகன் தலைமை வகித்தார். கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகராஜன், அவை தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ஆறுமுக பெருமாள் வரவேற்றார். அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ மக்களிடம் குறைகள் கேட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நேரு, மாவட்ட அவை தலைவர் அருணாசலம், ஊர் தலைவர் சண்முகவேல், தங்கம், வேல்மயில், ராஜகிளி உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து முறப்பநாடு, விட்டிலாபுரம், வி.கோவில்பத்து பஞ்சாயத்துகளில் திமுக சார்பில் கிராம சவைப கூட்டம் நடந்தது.