செய்துங்கநல்லூர் நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ராஜேந்திரன், மணக்கரை தபால் துறை அதிகாரி காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய அருள் தரும் அதிசய சித்தர் நூலை சிவராமன் திறனாய்வு செய்தார்.
இந்த கூட்டத்தில் நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி தருவதற்கு இசைந்த கனிமொழி எம்.பிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் செல்லப்பா, சிவராமன் உள்பட பலர் பேசினர். இராமகிருஷ்ணன், மஸ்தான், பாலா உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர் துரை ராஜ் நன்றி கூறினார். முன்னதாக இந்திய எல்கையில் உயிர்துறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.