செய்துங்கநல்லூரில் அமமுக சார்பில் எம்.ஜி. ஆர். நினைவு நாளை முன்னிட்டு அவர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய சேர்மன் கோசல்ராம், ராஜ் பாண்டியன், ஓ.பி.எம். முஸ்தபா, திருவரங்கம், மருதநாயகம், பிள்ள முத்து, பொந்தன்பொழி மாயாண்டி, கொம்பையா, முருகன், அப்பாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதே போல் வல்லநாட்டிலும் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.