
கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள பணியாளர்களுக்கு கொரோனா எதிர்ப்பு மருந்து மாத்திரை வழங்கப்பட்டது.
கருங்குளம் ஒன்றியத்தில் பணியாற்றும் அலுவலர்கள் , பணியாளர்கள், 31பஞ்சாயத்தை சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா எதிர்ப்பு மாத்திரை மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது. கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் வழங்கினார்.ஒன்றிய ஆணையாளர் சுப்பு லெட்சுமி தலைமை வகித்தார் . வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கிடாசலம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி சித்த மருத்தவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன், லெட்சுமணன், வட்டார சுகாதர மேற்பார்வையாளர் பெரியசாமி, கருங்குளம் மருத்துவ அலுவலர் சுந்தர், சார்பு ஆய்வாளர்கள் சண்முகபெருமாள், ஜாகீர், மருந்தாளுனர் கமல வள்ளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.