
உலகம் முழுவதும் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையை யட்டி நேற்று வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இன்று அத்தியவாசிமான நிகழ்வுக்காக ஓரளவு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பல்வேறு விதத்தில் உதவிகள் பல்வேறு அமைப்பினர் வழங்கி வருகிறார்கள். ஆனால் பட்டினியால் வாடும் மிருகங்களை சரிவர யாரும் பராமரிக்கவில்லை. இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டத்தில் சிவாஜி மன்றம் சார்பில் அதன் தலைவர் சிவாஜி முருகேசன் நாய்களுக்கு தெரு தெருவாக சென்று உணவளித்தார். இவரின் செயலை பல்வேறு அமைப்பினர் பாராட்டினர்.