
வல்லநாடு பகுதியில் தன்னார்வலர்கள் உதவியுடன் 1500க்கும் மேற்பட்டோர்க்கு வீடுகளுக்கு சென்று உணவு வழங்கிவரும் முறப்பநாடு காவல் ஆய்வாளரை அனைவரும் பாராட்டி வருகின்றன.
கொரோனா நோய் தொற்று காரணமாக மத்திய அரசு மே 17 தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.
ஆகவே ஏழை எளிய மக்கள், முதியவர்கள் எனப் பலரும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றன.மேலும் அன்றாட உணவுக்கு கூட வழியின்றி மிகுந்த சிரமபட்டு வருகின்றன.இந்த சூழல் நிலையில் தன்னார்வலர்கள் பலர் அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றன. இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள பாறைக்காட்டில் சாது சிதம்பர சுவாமிகள் சித்தர் பீடத்தில் தினமும் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கிற்கு பின்பு தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். இதனால் இந்த அன்னதான நிகழ்வு தடைப்பட்டது.
இந்நிலையில் இதனை அறிந்த முறப்பநாடு காவல் ஆய்வாளர் பார்த்திபன் அவர்கள் உடனடியாக பல முயற்சிகளை மேற்கொண்டு 60 நபர்கள் கொண்ட தன்னார்வலர்கள் குழுவை உருவாக்கினார். ஏழை எளிய மற்றும் வயது முதிர்ந்தோர் என ஒவ்வொரு கிராம வாரியாக கணக்கெடுத்து அதன்படி ஒரு பட்டியலை உருவாக்கி அந்த பட்டியலில் உள்ள மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே மதிய உணவை கொண்டு கொடுக்க ஏற்பாடுகளை செய்தார்கள். அதன்படி வல்லநாடு சித்தர் பீடத்தில் தினமும் 270 கிலோ அரிசியிட்டு தரமாக சுத்தமான முறையில் சமையல் செய்யபட்டு வருகிறது. அதனை சுமார் 60 நபர்களை கொண்ட தன்னார்வலர்கள் குழு காலை 5 மணி முதல் சமையல் வேலையை ஆரம்பித்து காலை 11 மணிக்குள் 1500 பார்சல் செய்து வைக்கிறார்கள்.
பின்னர் ஒவ்வொரு கிராமத்திற்கும் எத்தனை பேருக்கு தேவைபடுகிறது என எழுதி தனித்தனியாக வைக்கப்படுகிறது. சுமார் 35 கிராமத்தில் இருந்தும் இளைஞர்கள் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ என எடுத்து சென்று வீடு வீடாக வழங்கின்றனர். முறப்பநாடு காவல் ஆய்வாளர் பார்த்திபன் முயற்சியால் கடந்த ஏப்ரல் 6 தேதி முதல் தற்போது வரை 1500 உணவு வழங்க ஏற்பாடு செய்த காவல் ஆய்வாளரை பலரும் மனதார பாராட்டி நன்றி சொல்லி வருகின்றன.