பசுமை தமிழ் தலைமுறை சார்பில் குடியரசு தினத்தினை முன்னிட்டு வசவப்பபுரம் முதல் செந்நெல்பட்டி சாலையை சோலையாககும் விதமாக மரம் நடும் விழா நடந்தது.
இதற்காக விகேன் டிரஸ்ட் மற்றும் பசுமை தமிழ் தலைமுறை இணைந்து 25 மரக்கன்று நட்டனர். முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மரக்கன்று நட்டு நிகழ்வை துவக்கி வைத்தார்.
பசுமை தமிழ்தலை முறை அமைப்பின் நிறுவன தலைவர் சுகன் கிறிஸ்டோபர், கணேசன், கந்தசாமி, அருண், கணேசன், குட்டி, பூல்பாண்டி, ராஜேஷ், சிவா, கிருஷ்ணா, அரியமுத்து, சுரேஷ், சந்துரு, முத்து, சண்முகவேல், கன்னியப்பன், கொம்பையா, தனிப்பிரிவு காவலர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.