ஆதிச்சநல்லூரில் மனோன்மணியம் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் பார்வையிட்டனர்.
நெல்லை மனோன்மணியம் பல்கலைகழக உயிர்தொழில் நுட்பு துறை ஆய்வு மாணவர்கள் 20 பேர் ஆதிச்சநல்லூர் பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் ஆய்வு நடந்த இடம் குறித்து ஆய்வு செய்தனர்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களுக்கு ஆதிச்சநல்லூர் ஆய்வு குறித்து விளக்கம் அளித்தார். அதன் பின் அவர்கள் தேரிக்காடு பகுதியான அருஞ்சுனை காத்த அய்யனார், கற்குவேல்அய்யனார் கோயில், மணல் மாதா கோயில் ஆகிய பகுதிக்கு சென்றனர். அங்கு வளரும் உயிரினங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். அதன் பின் மணப்பாடு வந்தனர். அங்கு கடல் மட்டத்தில் இருந்து 100அடி உயரத்தில் உள்ள மணல் மேடுகளில் கடல் வாழ் உயிரினங்களில் இறந்த உடல்களை கண்டெடுத்து ஆய்வு செய்தனர். கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வர காரணம் என்ன. ஒரு காலத்தில் கடல் 100 அடி உயரத்தில் இருந்திருக்குமா என்பது குறித்து விவாதம் நடந்தது. இந்த ஒரு நாள் பயணத்திற்கு உயிர் தொழில் நுட்ப துறை தலைவர் டாக்டர் சுதாகரன் தலைமை வகித்தார். எழுத்தாளர் சிற்பி பாமா உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.