துரோகிகள் யார் என்பதை புரிந்து வாக்களியுங்கள் என வசவப்பபுரத்தில் ஓ.பி.எஸ். பேசினார்.
ஒரு மனிதருக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இருப்பது அவசியம். அதை உணர்ந்த அம்மா அரசு உணவு பாதுகாப்பு விஜயத்தில் கவனமாக இருந்து அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கியது. அதோடு மட்டுமல்லாமல் 2023க்குள் அனைத்து ஏழைகளுக்கு வீடு என்பதை மனதில் கொண்டு தற்போது 14 லட்சம் கன்கீரிட் வீடுகளை கட்டி முடித்துள்ளோம். மேலும் 6 லட்சம் கான்கீரிட் வீடுகளை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெண்கள் இந்த நாட்டுக்கு கண்கள் என்பதை அம்மா தாரக மந்திரமாக எடுத்துக்கொண்டார். எனவே தான் தாலிக்கு தங்கம் திட்டத்தினை உருவாக்கினார். இரு பெண் குழந்தை திட்டத்தினை உருவாக்கினார். பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவி தொகையாக 50 ஆயிரமும், 8 கிராம் தங்கமும் வழங்க ஏற்பாடு செய்தார். இது அம்மாவின் பொற்கால ஆட்சி. திமுக நம்மை விரட்ட எவ்வளவோ திட்டங்கள் போட்டும் தோல்வியுற்றே வருகிறது. அம்மா உயிரோடு இருக்கும் போது இன்னும் 100 வருடங்களுக்கு அதிமுகவை அழிக்க முடியாது என கூறினார். ஆனால் சில துரோகிகள் , ஒரு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அதிமுகவில் இருந்து நன்று தின்னு கொழுத்து போய், தற்போது துரோகிகள் ஆகி நாங்கள் திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை களைப்போம் என பேசிக்கொண்டிருக்கிறார். எவ்வளவு பெரிய துரோகம். அவர்கள் செய்த துரோகம் தான் இன்று ஒட்டபிடாரத்தில் இடைதேர்தல் வந்துள்ளது. அந்த துரோகிகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்க அதிமுக வேட்பாளர் மோகனுக்கு வாக்களியுங்கள். என்று அவர் பேசினார். அவருடன் அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜி, மணிகண்டன், முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.எ, வேட்டாளர் மோகன் உள்பட பலர் வந்தனர். அதன் பின் அவர் வல்லநாட்டிலும் பேசினார்.
ஒட்டபிடாரம் அதிமுக வேட்டபாளர் மோகன் முன்னாள் எம்.எல்.ஏ . அவர் பல நல்ல திட்டங்களை இந்த தொகுதிக்கு கொண்டு வந்தவர். பாவம் அப்பிராணி, சூதுவாது தெரியாது. பால் வடியும் முகாம். இவருக்கு வாக்களியுங்கள் என கூறியபோது பொதுமக்கள் சிரித்தனர்.