கருங்குளம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நடந்தது.
கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 31 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 114 கிராமங்களில் பள்ளி செல்லாத இடை நின்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிய கணக்கெடுப்புப் பணி கருங்குளம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மே 15 ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக அனவரதநல்லூர், ஆழிகுடியில் உள்ள செங்கல் சூளைகளில் மேற்கு வங்காளத்தில் இருந்த வந்து குடியமர்ந்த குடும்பங்கள் செங்கல் சூளையில் வேலை செய்து வருவது கண்டறியப்பட்டது. இதில் 7 குழந்தைகள் கண்டறியப்பட்டது. அவர்களை அனவரதநல்லூரில் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்ட அவர்களது தாய்மொழியான பெங்காலி மொழியில் பாடப்புத்தங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு தரமான கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் அவர்கள் முன்னிலையில் வட்டார வள மை மேற்பார்வையாளர் கலா உறுதியளித்தார். கணக்கெடுப்பு பணியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், கருங்குளம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலா , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசய ராஜா, வட்டார கல்வி அலுவலர் ஜெசுராஜன் செல்வக்குமார் மற்றும் வட்டார கல்வி அலுவலர் பாலசுந்தரி உதவி ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் கலந்துகொண்டனர்.