தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ;குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் சுகாதரக்கேடு ஆறாம்பண்ணை ஊர் பொதுமக்கள் கலெக்டர்-யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை அதிகாரிகள் பெற்றனர்.
ஆறாம்பண்ணை ஊர் பொதுமக்கள் வழங்கிய மனுவில் கூறியதாவது…
எங்கள் கிராமத்தின் அடிப்படைவசதிகளான இயங்காத தெருவிளக்குகள் ,சுத்தம் செய்யப்படாத குடிநீரேற்றம் , குடிநீர் மேல்நிலை தொட்டி,பழுதடைந்த நீர்த்தேக்கம் உள்ளது. அது கடந்த 4 மாதங்களாக சுத்தம் செய்யப்படவில்லை. இந்த குடிநீரால் எங்கள் கிராமத்திற்கு 100க்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 146 தெருவிளக்குகளில் 97 மட்டுமே இயங்குகின்றன. இந்த மேல்நிலைதொட்டியை சுத்தம் செய்ய அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எங்கள் ஊரில் எவ்வித அடிப்படை வேலையும் நடைபெறவில்லை. எங்கள் ஊரில் இதுவரை எந்த பஞ்சாயத்து கூட்டமோ, அரசு நிகழ்ச்சியோ நடந்ததாக தெரியவில்லை. வருடம் தோறும் எங்கள் பஞ்சாயத்திற்கு நிதி ஒதுக்குவதாக அறிந்தோம். ஆனால் எனவே எங்கள் பகுதி குறைகளை உடனே ஆட்சியர் சரி செய்ய வேண்டுமென அதில் கூறியுள்ளனர்.


