ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிளை தலைவர் தாரிக் தலைமை வகித்தார். கிளை செயலாளர் அஸார், பொருளாளர் ஜாபிர், மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் ஆஸிக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் யூசுப், தர்வேஸ் ஜாகீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கடந்த 4 ந்தேதி பேட்மாநகரத்தில் காஜா முகைதீன் என்பருடைய மகள் பாம்பு கடித்து இறந்து விட்டார். அவரை மேல்சிகிச்சைககாக கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தினால் அந்த இறப்பு ஏற்பட்டு விட்டது. எனவே பேட்மாநகரத்தில் த.மு.மு.க சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பயன்பெறும் வகையில் அவசர ஊர்தி அர்பணிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.