நவராத்திரி நாட்களில் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
அந்த கொலுக்களில் பல்வேறு பொம்மைகளைக் கொண்டு கொலு வைக்கப்படும் குறிப்பாக கார்த்திகை பெண்கள், அய்யனார், கருப்பசாமி, சுடலைமாடன் போன்ற காவல் தெய்வங்களும், தலைவர்கள், புராணக் கதைகளை எடுத்துரைக்கும் பொம்மைகள் வைக்கப்படும்.
ஆனால் ஸ்ரீவைகுண்டம் அருகே வசவப்பபுரத்தில் உள்ள திருநங்கை காலனியில் திருநங்கை பொன்னி என்பவர் வைத்துள்ள கொலு பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
அந்த கொலுவில் அறுபடை வீடு முருகன், அத்திவரதர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன், இராவணன் வரலாறு, கோவில்களில் முளைப்பாரி எடுத்து வருதல், கிராமங்களில் நடைபெறும் விளையாட்டு போட்டி, கிராம வாழ்வியல், சந்தை, கோவில் திருவிழாக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைத்துள்ளனர்.
மேலும் அங்கு வருகை தரும் பொதுமக்களுக்கு திருநங்கை பொன்னி விளக்கம் அளித்து வருகிறார். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பக்தர்களும் பார்த்து ரசித்து செல்கின்றனர்.


