பழங்கால பாண்டியர்களின் தலைநகரமாக இருந்த கொற்கை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான துறைமுக நகரமாக விளங்கியது என்பது தொடர்பான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கொற்கை என்பதற்கான பெயர்க் காரணம், அங்கு நடைபெற்ற முத்துக்குளிக்கும் தொழில் மற்றும் கடல் வாணிபம், அங்கு உள்ள கோவில் , நாணயங்கள் அச்சிடப்பட்டது, ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள் உள்ளிட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. கொற்கை என்பது வேறு, குலசேகரப்பட்டினம் என்பது வேறு என்பதும், கொற்கை, பழைய காயல், காயல்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் அழிய என்ன காரணம் என்பதும் விளக்கப்பட்டு இருக்கிறது. இவற்றுடன் சேது சமுத்தரத் திட்டம், தற்போதைய தூத்துக்குடி துறைமுகத்தின் நிலை ஆகியவை பற்றிய தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
(ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு வெளீயீடு -பொன்சொர்ணா, விலைரூ 400 தொடர்பு எண் 8760970002, 9442834236)


