தீப ஓளியேற்றுங்கள் தீயசக்திகள் மறையட்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடலில் பேசினார்.
தூத்துக்குடி மாநகராட்சி 4வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி திருக்கோவில் நிர்வாகத்தினர் நோில் சந்தித்து அந்த கோவிலில் நடைபெறும் விளக்கு பூஜைக்கு திருவிளக்குகள் பக்தர்கள் நலன் கருதி தந்து உதவிடுமாறு கோாிக்கை விடுத்ததையடுத்து கோவில் திருவிளக்கு பூஜைக்கு நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொண்டதின் படி 54 விளக்குகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நிர்வாகத்தினாிடம் வழங்கினார்.
அப்போது அவர் பேசும் போது எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தோடு திராவிட மாடல் ஆட்சியை தளபதியார் வழங்கி வருகிறார். இந்து மக்களின் கோாிக்கையை ஏற்று வழங்கியுள்ள இந்த திருவிளக்கின் தீப ஓளி உங்கள் வாழ்க்கையின் ஓளி விளக்காகவும் தீய சக்திகள் மறையட்டும் எல்லோரும் எல்லா செல்வங்களோடும் இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, கவுன்சிலர்கள் நாகேஸ்வாி, ஜெயசீலி, வட்ட அவைத் தலைவர் முனியசாமி, வட்ட செயலாளர் சதீஷ்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட் ஆகியோர் உடனிருந்தனர்.


