தூத்துக்குடி – பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வருகிற 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார்.
நெல்லை சந்திப்பில் இருந்து சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக கேரள மாநிலம் பாலக்காடு வரை பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க மத்திய ரயில்வே வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி பாலக்காடு- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 16791, 16792)) பாலக்காட்டில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு நெல்லை சந்திப்பை வந்தடைகிறது. அங்கிருந்து 4.55 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறது. இந்த ரயில் சேவையை 15ஆம் தேதி பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வருகிற துவக்கி வைக்கிறார்.


