நாசரேத் பேருராட்சி அரசு நூலக வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பில் நூலக வளாகத்தில் சுதந்திர தின சிறப்பு நிகழ்வாக இலக்கிய கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு வாசகர் வட்டத் தலைவரும், முன்னாள் வட்டாட்சி யருமான அய்யாக்குட்டி தலைமை வகித்தார். நூலகர் பொன் ராதா முன்னிலை வகித்தார். எழுத்தாளர் ஆறுமுகப் பெருமாள் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார். பேராசிரியர் காசிராசன் சுதந்திர தினம் குறித்தும்,தமிழர் வீரம் குறித் தும்பேசினார். வள்ளுவர் வாசகர் வட்டத்துணைத் தலைவர் கொம்பையா பேசினார்.
சிறப்பு அழைப்பாளராகதூத்துக்குடி தொடுவானம் கலை இலக்கியப் பேவையின் தலைவர் நெல்லை தேவன், சுதந்திர தினம் மற்றும் எழுத்தாளர் புதுமைப்பித் தன் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
சிறப்புவிருந்தினருக்குபொன் னாடை போர்த்தி கௌரவிக்கப்பட் டார்.கூட்டத்தில் கவிஞர் தேவதா சன் ஞானராஜ், கவிஞர் சிவசுப்பிர மணியன், முன்னாள் பேருராட்சி செயல் அலுவலர் மணி மொழிச் செல்வன், ஒய்வுபெற்ற தலைமை யாசிரியர் செல்வின், ஊரகத்துறை கணேசன், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் ரஞ்சன், தொழிற்சங்க நிர்வாகி கிருஷ்ணராஜ்,தொலைதொடர்புதுறை ஞானமுத்து, ஜான் பிரிட்டோ, நவீன் பாலாஜி, குமார் திரளானோர் கலந்து கொண்டனர்.கூட்டுறவுத்துறை கணேசன் நன்றி கூறினார்.


