ஆதிச்சநல்லூரில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் திறப்பு விழா இன்று 5 ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
இதற்கிடையில் இந்தியாவிலேயே முதல் முதலாக வெளிநாட்டில் உள்ளதுபோல் உள்ளது உள்ளபடி அகழாய்வு செய்த இடத்தினை அப்படியே வைத்துஅதன் மீது கண்ணாடி பேழை அமைத்து அதன் மேலிருந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தென் தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரை பார்வையிட வேண்டும் என மாணவர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டள்ளது.
இதற்கிடையில் திறப்பு விழா காணும் முன்பே, கல்லூரி மாணவர்கள் ஆதிச்சநல்லூர் வருகை தந்தனர். தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப் படிப்பு மாணவ மாணவிகளுக்குக் கடந்த ஐந்து நாட்கள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் 450 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஆதிச்சநல்லூரை பற்றி கேள்வி பட்டு இறுதி நாளில் 450 மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூர் கல்விச் சுற்றுலாவாக வருகை தந்தனர். இவர்களுடன் பல்கலைகழகத்தின் முதலாம் ஆண்டு முதுகலை தொல்லியல் துறை மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு சமூகரெங்கபுரத்திருந்து இயங்கி வரும் பனை மரம் நிதி நுட்ப தனியார் நிறுவனமும், பாளையங்கோட்டை சாரதா கல்லூரியும் போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆதிச்சநல்லூரில் பி சைட் எனப்படும் இடத்திற்கு அவர்கள் வ்ருகை தந்தனர். கண்ணாடி பேழை அமைக்கும் பணியின் நிறைவு பணி நடைபெறுவதால், அவ்விடத்தினை பார்வையிட முடியவில்லை. ஆகவே அருகில் உள்ள குழியில் உள்ள முதுமக்கள் தாழிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த சுற்றுலாவை ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு இயக்குநர் பேராசிரியர் மருது குட்டி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவரும் (பொறுப்பு) உயிர் தொழில்நுட்பத்துறை பேராசிரியருமான சுதாகர் அவர்களும் விளக்கம் அளித்தனர். அதன் பின் மாணவர்கள் 5 ஆயிரம் பழமையான பொருநை நதிக்கரை நாகரீகத்தினை கண்டு களித்த பெருமையுடன் மீண்டும் கல்லூருக்கு கிளம்பினர்.


