நாசரேத் அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்த வியபாரியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் யோவான் (49), மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு இரு தினங்களுக்கு முன் 11 வயது சிறுமி பொருட்கள் வாங்க வந்துள்ளார்.
அப்போது யோவான், அந்த சிறுமியின் கையைப்பிடித்து இழுத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார், சிறுமியின் தாய், திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, யோவானை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


