தூத்துக்குடி முல்லை காமராஜர் கைப்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற மின்னொளி கைப்பந்து போட்டியில் ரிசர்வ் போலீஸ் அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி முள்ளக்காடு முல்லை காமராஜர் கைப்பந்து கழகம் நடத்திய மின்னொளி கைப்பந்து போட்டி எம். சவேரியார்புரம் பள்ளி மைதானத்தில் கடந்த 27 மற்றும் 28 ம் தேதிகளில் நடைபெற்றது. போட்டியில் சுமார் 36 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகளை பங்குதந்தை மரிய அரசு மற்றும் காவல்துறை ஆய்வாளர் கிங்ஸ்லி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முதல் பரிசை ஆயுத ரிசர்வ் போலீஸ் அணியும் மற்றும் இரண்டாம் பரிசை தூத்துக்குடி டிஸ்ட்ரிக்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் தட்டி சென்றனர். மூன்றாவது பரிசை கால்டுவல் அணியும் நான்காவது பரிசை தேவி சிமெண்ட் ஒர்க்ஸ் கிளப் அணியும் தட்டி சென்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பொன் ராஜ்குமார், ராஜேஷ், பொன் சுபாஷ், சிம்சோன், இசக்கி ராஜவேல் மற்றும் பிரைட்ட்டன் ஆகியோர் செய்திருந்தனர்.


