தூத்துக்குடியில் ஸ்ரீ பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ் நூல் மற்றும் இசை வெளியீடு விழா நடந்தது.
தூத்துக்குடி சிவன் கோவில் அருகே உள்ள டி.ஏ.திருமண மணடபத்தில் ஸ்ரீ பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ் இசை தகடு மற்றும் நூல் வெளியீட்டு விழா நடந்தது.
ஸ்ரீசாரதா கலைக்கூடம் மாணவ மாணவியர் இறை வணக்கம் பாடினர். ஸ்ரீசாரதா கலைக்கூடம் கௌரி ராஜசேகர் வரவேற்றார். திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இணை இயக்குனர் பழனி தலைமை வகித்தார். செங்கோல் மட ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுரை ஆற்றினார். புலவர் சங்கரலிங்கம் நூல் குறித்த விளக்கவுரையாற்றினார். சாகித்ய அகாதெமி விருதாளர் சோ.தர்மன், சாந்தி ரவிபாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஸ்ரீ பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ நூலை அழகர் ஜீவல்லர்ஸ் பத்மநாபன் வெளியிட்டார். எழுத்தாளர்கள் சோ.தர்மன், நாறும்பூநாதன், பே, சங்கரலிங்கம், முத்தாலங்குறிச்சி காமராசு, இளமுருகு ஆகியோர் பெற்று கொண்டனர்.
ஸ்ரீபாகம்பரியாள் ஸ்ரீ சங்கர ராமமேஸ்வரர் ஆலயத்திற்கான இசை வெளியீடு தொடர்ந்து நடைபெற்றது. செங்கோல் மட ஆதினம் வெளியிட, தூத்துக்குடி ஆலால சுந்தரவேத சிவ ஆகம பாடசாலை முதல்வர் செல்வம் பட்டர் பெற்றுக்கொண்டார். குருந்தகடை டி.ஏ தெய்வநாயகம் வெளியிட, திட்ட இயக்குனர் பழனி பெற்று கொண்டார். வலையளியில் கோபாலகிருஷ்ணன், இசைப்பள்ளி தலைமையாசிரியர் சிவகாமிசெல்வி ஆகியோர் வெளியிட விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
வானொலியில் ராதாகிருஷ்ணன் வெளியிட மு.வெ.ரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். திருநெல்வேலி கலை பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் சிவகாமி செல்வி, எழுத்தாளர் நாறும்பூநாதன், முத்தாலங்குறிச்சி காமராசு, இளமுருகு, தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிகழச்சிப் பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், விமான நிலைய இயக்குனர் சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கலர் வளர்மணி உமா மாணிக்கம் சிவாஞ்சலி நாட்டியாலயா மாணவிகள் பரதநாட்டியம் நடைபெற்றது. வேம்பார் தலைமையாசிரியர் கிறிஸ்து ஞானவள்ளுவன், வில்லிசைகலைஞர் ஜெயலலிதா, சுப்புராஜ், மாரீஸ்வரன், பேராசிரியர் சகாசங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். கலைவளர்மணி இசக்கியப்பன் ஏற்புரையாற்றினார். எழுத்தாளர் மு.வெ.ரா தொகுத்து வழங்கினார்.


