தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் 64-ஆவது பட்டமளிப்பு விழா சுப்பையா வித்யாலயம் பள்ளியில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 2022-2024 மற்றும் 2023-2025 ஆகிய கல்வியாண்டுகளில் இளங்கலை (B.Ed) மற்றும் முதுகலை (M.Ed) கல்வியியல் பயின்ற ஆசிரிய மாணவிகளுக்கான இப்பட்டமளிப்பு விழா, திருநெல்வேலி கல்லூரி கல்வி இணை இயக்குநர் விக்டோரியா தங்கம், சுப்பையா தர்மநிதியின் அறங்காவலர் செ. கௌதமன் மற்றும் கல்லூரி செயலர் ச. முரளிதரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இரா.சூர்யகலா அனைவரையும் வரவேற்று, கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
இவ்விழாவில் திருநெல்வேலி கல்லூரி கல்வி இணை இயக்குநர் விக்டோரியா தங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 120 இளங்கலை கல்வியியல் மாணவிகள் மற்றும் 10 முதுகலை கல்வியியல் மாணவிகள் என மொத்தம் 130 மாணவ ஆசிரியர்களுக்குப் பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். இக்கல்வி விழாவில் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


