வடக்கு காரசேரியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, தெய்வச்செயல்புரம் கால்நடை மருத்துவமனை சார்பில் வடக்கு காரசேரியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜன் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் மருத்துவர் ஆண்டனிசுரேஷ் முன்னிலை வகித்தார். உதவி மருத்துவர் ஆனந்தராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்களின் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
ஊராட்சித் தலைவர் பேச்சியம்மாள் சிறந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பரிசு வழங்கினார். 198 கோழிகளுக்கு கழிச்சல்நோய் தடுப்பூசியும், 441 ஆடு மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபோல், முடிவைத்தானேந்தல் கால்நடை மருத்துவமனை சார்பில் அம்பேத்கர்நகரில் நடைபெற்ற மருத்துவ முகாமில், உதவி மருத்துவர் காசிராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 200 கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசியும், 645 ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சையும் அளித்தனர்.


