தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
மாவட்ட வருவாய் ஆய்வாளர் கண்ணபிரான் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் மாவட்ட செயல் அலுவலர் இரா. முத்தமிழ் செல்வன் வரவேற்றார். ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த ராஜ் கலந்துகொண்டு 100 மாற்றுத்திறனாளிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்குநர் திட்ட இயக்குநர் பிச்சையா, கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கிய லீலா, தமிழ்நாடு ஊரகப் புத்தாகத்திட்ட செயல் அலுவலர் சேவியர் உள்படப் பலர் பேசினர். திறன் மாவட்ட வேலைவாய்ப்பு செயல் அலுவலர் இராதா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் மல்லிகா, வட்டார ஒருங்கிணைப்பாளர் வசந்தி, பேச்சிதாய், பானுமதி, பாக்கிய லெட்சுமி, கிரேஸ், சுடலி ஆகியோர் செய்திருந்தனர்.
—


