
செய்துங்கநல்லூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள புளியங்குளம் கிராமம், ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ந. பிரியா (25), இவர் நெல்லை வி.எம். சத்திரத்தில் உள்ள மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த வீரசுந்தரி என்ற பெண் பின்னால் அமர்ந்திருந்தார்.
செய்துங்கநல்லூர் அருகே வந்தபோது, எதிரே வந்த மாருதி கார் ஸ்கூட்டி மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பிரியா உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வீரசுந்தரி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த ஆத்தூர் மேற்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சின்னதுரை (26) என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.