மாற்று திறனாளி வாக்களிக்க வேண்டி மாற்று திறனாளி செயலி விழிப்புணர்வு படத்தினை குறும்பட இயக்குனர் கா.அபிஷ் விகனேஷ் பாராட்டி குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் பாராட்டி பாராட்டு சான்றிதழை வழங்கினார். தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடந்த இந்த விழாவில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், கிராம உதயம் ஆழ்வார் தோப்பு மேலாளர் வேல்முருகன், ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. அருகில் காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சப் கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் கலோன், தூத்துக்குடி ஆணையர் ஜெயசீலன் உள்பட பலர் இருந்தனர்.
குறும்பட இயக்குனர் கா. அபிஷ் விக்னேஷ் இயக்கிய படத்தில் மாற்றுதிறனாளிக்ளுக்காக அரசு அறிமுகப்படுத்தி உள்ள பி.டபுள்.டி ஆப் மூலம் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து விளக்குகிறது. இந்த படத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் கி செந்தில் ராஜ் வழிகாட்டுதலில் பொன்சொர்ணா ஸ்டுடியோ தாயரித்திருந்தது. இந்த படம் மீடியா கிறுக்கன் யூ டியூப்பில் பதிவிடப்பட்டுள்ளது.


