திருச்செந்தூர் சிட்டி அரிமா சங்கம் சார்பில் மாவட்ட ஆளுனர் வருகை விழா திருச் செந்தூரில் நடந்தது. திருச்செந்தூர் கீழரத வீதி பண்ணையார் சமுதாய பொதுமடத்தில் வைத்து நடந்த விழாவிற்கு சங்க தலைவர் மெய்கண்ட முத்து தலைமை வகித்தார். செயலாளர் அமல்ராஜ் அறிமுக படுத்தினார். மாவட்ட ஆளுனர் அரிமா ஜெஸ்டின் பால் சிறப்புரை ஆற்றி விருதுகள் வழங்கினார்.
சிறந்த எழுத்தாளராக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தேர்ந்தெடுக்கபப்ட்டு விருது பெற்றார். மேலப்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வசனமலர் அன்னபாக்கியம், திருச்சி லாரி ஓட்டுநர் செல்லம்மாள், திருச்சி விளையாட்டு வீரர் மகாகுரு விக்டர் குழந்தைராஜ், விருதுநகர் மாவட்ட வெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிராஜா, காவலர் முத்துராஜன், புகைப்பட கலைஞர் சங்கர், பத்திரிக்கை நிருபர் பிரஷன் குமார், நாட்டுப்புற கலைஞர் ஆரோக்கியம், சமூக சேவை அரிமா கண்ணன், சமூக ஆர்வலர் கோவை ஞானசேகரன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிலுவை பிச்சை, மாவட்ட அமைச்சரவை செயலர் மோகன்தாஸ், வெற்றிச்செல்வன், துணை செயல் பால் செல்லப்பா, மாவடட் கவுன்சிலர் தர்மசீலன் , அம்பர் போர்ட் மண்டலத் தலைவர் , பிரான்சிஸ் ரவி, மூத்த தலைவர்கள் கணேஷ்பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட தலைவர் ராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலதிருச்செந்தூர் ஸ்ரீகாஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் திறமைகளைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு மரக்கன்று நடப்பட்டது. பொருளாளர் யோகன் கற்றார் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கான்சியூஸ், இராசரத்தினம், மனோகர் ராஜன், தேவராஜ் ஜேம்ஸ், ஜெகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் ஆறுமுகநேரி , தூத்துக்குடி சென்டரல் , கோவில்பட்டி டைனமிக் , பாளையங்கோட்டை கோல்டு, பாளையங்கோட்டை ஸ்டார்,. ஆரல்வாய் மொழி ஆகிய அரிமா சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.


