தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட முக்கியத் தலைமை அஞ்சலகங்களில் புனிதக் கங்கை நதி நீர் பாட்டில்கள் சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பாரம்பரியமிக்கக் கங்கை நதி நீரை நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பொதுமக்களுக்கும் கொண்டு சேர்க்கும் உயரிய பணியை இந்திய அஞ்சல் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய தலைமை அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் பாட்டில்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. 250 மி.லி. அளவு கொண்ட ஒரு பாட்டில் கங்கை நதி நீர் ரூ. 30 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சுப நிகழ்ச்சிகள், புதிய தொழில் தொடங்குதல், புதுமனைப் புகுவிழா மற்றும் ஆன்மீகச் சடங்குகள் போன்ற தேவைகளுக்குப் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் பெறவும், சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும் 98418 75710 மற்றும் 97916 55030 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


