மதுரை உயர்நீதி மன்ற உத்தரவின் படி ஆத்தூரை தொல்லியல் களத்தினை தொல்லியல் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் திருச்செந்தூர் தாலூகா ஆத்தூர் முக்காணி இடையே புதிய பாலம் கட்டப்பட்டது. 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாழவல்லான் கிராமத்தில் தடுப்பணை காணப்படுகிறது. இந்த ஆற்று படுகையில் தண்ணீர் வற்றிய காலத்தில் 200 அடி ஆழத்தில் பழம் கால கற்கள் கிடைத்துள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்தை சேர்ந்தவை என்று அல்லாமல பல காலங்களை சேர்ந்தவையாக உள்ளன. பழங்கால பெண் தெய்வங்களின் சிலைகள் இங்குள்ளன. ஆனால் இதுவரை வரலாற்று பூர்வமான ஆய்வுகளும் இவ்விடத்தில் மேற்கொள்ளப்படவில்லை. சங்ககால இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள கொற்கை துறைமுகம் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் பிரபலமான ஆதிச்சநல்லூர் பகுதி 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எனவே முக்காணி ஆத்தூர் ஆற்று படுகையில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இங்கு ஆய்வு மேற்கொண்டால் வரலாற்று பூர்வமான ஆதாரங்கள் கிடைக்கும் எனவே முக்காணி ஆத்தூர் இடையிலான தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொல்லியல் நிபுனர் குழு அமைத்து ஆற்றுப்படுகையில் அடியில் உள்ள கல்படிமங்களில் அறிவியல் பூர்வ முறையில் அகழாய்வு மேற்கொள்ளவும், அங்கு கல் படிமங்களை கார்பன் டேட்டிங் பரிசோதனை மேற்கொள்ளவும் அதன் அறிக்கையை வெளியிடவும் மேற்கொள்ளவேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி மத்திய மாநில தொல்லியல் துறையினர் பரிசிலிக்க உத்தரவிட்டனர். அதன் பின் இந் வழக்கு விசாரணையை நவம்பர் 18 க்கு தள்ளி வைத்தனர்.
இதற்கிடையில் நேற்று ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர், தொல்லியல் அலுவலர் லோகநாதன் ஆகியோர் ஆத்தூர் தாமிரபரணி படுகைக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கீரனூர் அருகில் உள்ள குளத்திலும் பார்வையிட்டனர். தாமிரபரணி ஆற்றில் அதிக தண்ணீர் இருந்த காரணத்தினால் இவர்களால் அடுத்த கட்ட பணி செய்ய இயலவில்லை. ஆகவே இதற்கான தடயங்கள் குறித்து அங்குள்ள மக்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.


