ஆதிச்சநல்லூரில் பாண்டிசேரி செய்தி மற்றும் விளம்பர துறை செயலர் பார்வையிட்டார்.
பாண்டிச்சேரி செய்தி செய்தி மற்றும் விளம்பர துறை செயலர். துணை நிலை ஆளுனரின் சிறப்பு செயலர், உள்துறை சிறப்பு செயலர் சுந்தரரேசன் ஆதிச்சநல்லூருக்கு வருகை தந்தார். அவர் அங்கு தோண்டப்பட்ட குழிகளை பார்வையிட்டார். அவருக்கு அகழாய்வு இயக்குனர் பாஸ்கர், தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அதன் பின் குழிகளில் உள்ள முதுமக்கள் தாழிகள் பற்றியும் அங்கு கிடைத்த பொருள்கள் பற்றி விவரம் கேட்டறிந்தார். அதன் பின் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/17 என்ற நூலை அறிமுகம் செய்து வைத்தார். பேயன்விளை கா.ஆ. மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற வரலாற்று துறை ஆசிரியர் துரைபாண்டியன், ஓய்வு பெற்ற அறிவியல் மற்றும் தாவிரவியல் ஆசிரியர் ஜெயஜானகி ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலை அகழாய்வு இயக்குனர் பாஸ்கர், தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் ஆகியோர் பெற்று கொண்டனர்.
மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைகழக உயிரியல் துறை தலைவர் டாக்டர் சுதாகரன், சமூக சேவகர் மளவை மரியதாஸ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


