செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த சுதந்திர தினவிழாவில் கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துறைத் தலைவர்கள் பாருக், நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் ஆறுமுகசேகர், உடற்கல்வியல் ஆசிரியர் ராகுல், அலுவலக கண்காணிப்பாளர் கணேசன், உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டிபன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


