செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்து தேசிய கொடியேற்றி வைத்தார். நூலகர் லெட்சுமணன் வரவேற்றார். நூலகர்கள் வல்லநாடு தளவாய், ஆழ்வார்திருநகரி சம்சுதீன், தென்திருப்பேரை பொன்னையன், பாலமுருகன், ஜுவானந்தம், நயினார் உள்பட பலர் கலந்துகொண்டனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நன்றி கூறினார்.


