செய்துங்கநல்லூர் பஞ்சாயத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்து தேசிய கொடியேற்றி வைத்தார். சமூக சேவகர் சுடலை முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து உதவியாளர் சங்கரபாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.


