வல்லநாடு அருகே உள்ள உடையார் குளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மயங்கிக் கீழே விழுந்து சாவு இதுகுறித்து தகவலறிந்த முரப்பநாடு போலீஸார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாராயணன் மகன் காளிமுத்து. வயது 32. இவருக்கு சொந்த ஊர் அருகே உள்ள கருங்குளம், காளிமுத்து வல்லநாடு அருகே உள்ள உடையார் குளத்தில் திருமணமாகி மனைவி வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும் மகளும் மகனும் உள்ளனர், மகன் பிறந்து 15 நாட்கள் ஆகியுள்ளன. இவர் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வல்லநாடு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது மியாகான் பள்ளி பள்ளிவாசல் அருகே பைக்கில் கீழே விழுந்து மயங்கிய நிலையில் கிடந்தார், தகவலறிந்த அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை தூக்கி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு இவர் ஏற்கனவே இறந்துவிட்டார், என்று தெரிவித்தனர். இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


