செய்துங்கநல்லூர் அருகே உள்ள சிங்கத்தைகுறிச்சி, மணக்கரையில், ஏழை எளியவர்களுக்கு கொராணா நிவாரண பொருட்கள், பஞ்சாயத்து தலைவர்கள் ஏற்பாட்டில் கருங்குளம் யூனியன் சேர்மன் தலைமையில் வழங்கப்பட்டது.
கருங்குளம் யூனியன் குட்பட்ட பஞ்சாயத்துகளில் யூனியன் சேர்மன் ஏற்பாட்டிலும், பஞ்சாயத்து தலைவர்கள் ஏற்பாட்டிலும், ஏழை-எளிய மக்களுக்கு கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது,
இதைதொடர்ந்து மணக்கரை பஞ்சாயத்து தலைவர் ஏற்பாட்டில் கிராமத்து ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை காய்கறி பொருட்களை யூனியன் சேர்மன் தலைமையிலும், முறப்பநாடு போலீசார் பாதுகாப்பிலும், சமூக இடைவெளியை கடைபிடித்து, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், துணை பிடிஓ ஸ்டீபன் ரத்தினகுமார், முத்துலட்சுமி , முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் , சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு வழக்கறிஞர் அன்பு அங்கப்பன், மணக்கரை பஞ்சாயத்து தலைவர் அருணாசலம் வடிவு சீனி பாண்டியன், துணைத்தலைவர் முத்துலட்சுமி குமரன், கிளார்க் மாரியப்பன், மற்றும் பஞ்சாயத்து தூய்மை பணியாளர்கள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


