ஸ்ரீவைகுண்டம் அருகே மது பழக்கத்தை நிறுத்த முடியாமல் வாலிபர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே அனவரதநல்லூர், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் கோபாலகிருஷ்ணன் (27). மது போதைக்கு அடிமையான இவர் கடந்த சில தினங்களாக டாஸ்மாக் மூடியிருந்ததால் மது குடிக்கமுடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் இவரது மதுப்பழக்கத்தை நிறுத்துவதற்காக அவரது தந்தை ரகசியமாக உணவில் மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இந்த விபரம் தெரியவரவே மனவேதனையடைந்த கோபாலகிருஷ்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


