இந்த நாளில் நான் தினமலரின் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் பதிப்பகத்தில் எழுதிய “வரங்களை அள்ளித் தரும் வல்ல நாடு சித்தர்” என்னும் நூல் வெளி வந்துள்ளது. என் வாழ்வில் இது பேரின்பம். புத்தாண்டு பரிசாக வல்ல நாடு சித்தர் எனக்கு அருளியது இந்த நூல் என நான் உணர்கிறேன். இதற்காக எனக்கு உதவிய தற்போது தவ நிலையை அடைந்த சப் இன்ஸ்பெக்டர் சந்தானம் அய்யா, தொண்டர் குல நிர்வாகிகள், அருள் ஆறுதல் இல்லம் வல்ல நாடு சாது சிதம்பர சுவாமி அறக்கட்டளை தலைவர் சுப்பையா ஐயா, செயலாளர் சிவானந்தம் ஐயா, பொருளாளர் ராசா ஐயா மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. வல்ல நாடு சித்தர் பீட அலுவலக பணியாளர்கள் சிவ சண்முக சுந்தரம் என்ற ஜெகநாதன் அய்யா, முருகன் ஐயா எனது எழுத்துத் துறைக்கு உதவியாக இருக்கும் ஐ.பி.எஸ் மாசான முத்து அய்யா, ஐ.ஏ.எஸ் ராஜேந்திரன் அய்யா, செந்தமிழ் கல்வி அறநிலைய ஆலோசகர் முனைவர் வே. ஆனந்தன் அய்யா அவர்களுக்கும் தாமரை மீடியா பிரவேட் லிமிடட் நிர்வாக இயக்குனர் ஆசிரியர் மற்றும் குழுவினருக்கும் நன்றி. குறிப்பாக என்னை பதிப்பகத்துடன் அறிமுகப் படுத்திய எழுத்தாளர் பிரபு சங்கர் அய்யா அவர்களுக்கும், பகவதி முத்து அய்யா அவர்களுக்கும், உதவி ஆசிரியர் இளங்கோவன் அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி.
நூல் வேண்டுவோர் 18004257700 என்ற எண்ணிற்கு போன் செய்து காலை 7 மணிமுதல் இரவு 7 மணி வரை பெற்றுக்கொள்ளுங்கள்.
இவை அனைத்துக்கும் காரணம் வல்ல நாடு சித்தர் அய்யாவின் அருட்கொடைதான். எனவே வல்ல நாட்டுச் சுவாமிகளுக்கு மிக்க நன்றி. இந்த வருடத்தில் நல்லத்துவக்கம் தந்த வாசகர்கள் உங்களுக்கும் நன்றி நன்றி.
அன்புடன்-எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


