தூத்துக்குடியில் சிஜிஇ காலனியில் கழிவுநீர் கால்வாய் அமைத்திடும் பணியை அமைச்சர் பி.கீதா ஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி சிஜிஇ காலனி மற்றும் சிவந்தாகுளம் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்றிட ஏதுவாக நடைபெற்று வரும் கழிவு நீர் கால்வாய் அமைத்திடும் பணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர உடன் இருந்தனர்.


