தூத்துக்குடி மாநகரில் பனை குடில் தமிழன் பாரம்பரிய உணவகம் திறப்பு விழா (ஆக.30) நாளை நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் போல்பேட்டை கிழக்கு மெயின்ரேடு பெரிசன் பிளாசா அருகே, பனைகுடில் தமிழன் பாரம்பரிய உணவகம் திறப்பு விழா நாளை (30ஆம் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. டிஎஸ்எப் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் சந்திரா மனோகரன் உணவகத்தை திறந்து வைக்கிறார். நிலா சீ புட்ஸ் நிர்வாக இயக்குநர் சி.செல்வின் பிரபு குத்துவிளக்கு ஏற்றுகிறார்.
செல்லம் குழும நிறுவனங்களின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். வழக்கறிஞர் சிலுவை அனைவரையும் வரவேற்கிறார். கீர்த்தி மெட்டல் முருகன் நன்றியுரை வழங்குகிறார்.
திறப்பு விழா சிறப்பு விற்பனையாக பட்டை சோறு, 100கிராம் மட்டன், 100 கிராம் மீன், 100 கிராம் நன்டு, 100 கிராம் கனவா ஆகியவை ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே உணவகத்தில் சாப்பிடவும், பார்சலுக்கும் இச்சலுகை வழங்கப்படுகிறது.
மதிய உணவாக பட்ட சோறு மட்டன் கறி, கனவா மசாலா, விலை மீன் பொரியல், சங்கு சதை மசாலா, நாட்டுக்கோழி பிரட்டல், கனவா பொரியல்,நெத்திலி மீன் அவியல், மீன் கட்லட், மட்டன் குடல் வரட்டல், நண்டு ரசம், சாலை மீன் குழம்பு, சுறா புட்டு, இறால் பொரியல், நண்டு பொரியல், சீலா கருவாட்டு குழம்பு, நெத்திலி கருவாடு குழம்பு, இறால் தொக்கு, நண்டு மசாலா, காஞ்ச மட்டன் கறி, நாட்டுக்கோழி உப்பு வரட்டல் போன்றவையும், இரவில் இட்லி குடல் குழம்பு, மீன் குழம்பு, இறால் குழம்பு, ஈரல் குழம்பு போன்றவைகளும் வழங்கப்படும். ஆடர்டர்களுக்கு 88708 08441 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


