தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் 3 எதிரிகளை கைது செய்தும் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 3பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 21 கிலோ ஹெராயினை கைப்பற்ற உறுதுணையாக இருந்த தென்பாகம் காவல் நிலைய தலைமைக் காவலர் பென்சிங், வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜா, மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் செந்தில்குமார், திருமணிராஜன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணியை பாராட்டி ரூபாய் 10,000/- வெகுமதியும்,
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் எதிரியை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 9¼ சவரன் நகைகளை பறிமுதல் செய்த விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆனந்ததாண்டவம், குளத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குமரேசன், தலைமை காவலர்கள் வடிவேல், செல்வ கிருஷ்ணன் மற்றும் முதல் நிலை பெண் காவலர் முருகலெட்சுமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் எதிரிகளை போலீஸ் காவலுக்கு எடுத்து விசாரணை செய்து அவர்களிடமிருந்து வழக்கின் சொத்தான 45 சவரன் தங்க நகைகளை மீட்ட சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிராங்க் ஸ்டீபன், முறப்பநாடு காவல் நிலைய தலைமைக் காவலர் சுந்தர்ராஜ், தட்டாபாறை காவல் நிலைய முதல்நிலைக் காவலர் கணேசன் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய காவலர் மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடம்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 36 வழக்குகளை கடந்த வாரத்தில் லோக் அதாலத் நீதிமன்றத்தில் முடித்த கடம்பூர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் இசக்கிமுத்து என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் இருந்தபோது விரட்டிப் பிடித்து கைது செய்த விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் ராஜ்குமார் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு காவல்துறையினருக்கான 2021 ஆம் ஆண்டுக்கான மண்டல அளவிலான தேக்வோண்டா விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 46 கிலோ எடை பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், ஜூடோ விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை முதலாம் படைப்பிரிவு பெண் காவலர் கிருஷ்ணவேணி என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ்குமார், ஷாமளா தேவி, பவித்ரா மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.