நாசரேத்தில் மோட்டார் பைக்குகளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மணி நகரைச் சேர்ந்தவர் காட்டேரி பெருமாள் மகன் துரைசாமி (39). இவர் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் கடந்த 20ம் தேதி திருடு போனது. அதே நாளில் நாசரேத் வியாபாரிகள் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் எட்வர்ட் (57) என்பவரின் பைக்கும் பைக் திருடு போனது.
இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் நாசரேத் மணி நகரைச் சேர்ந்த அந்தோணி மகன் இருதயராஜ் என்ற பூச்சி (46) என்பவர் மோட்டார் பைக்குகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, திருடப்பட்ட 2 பைக்குகளையும் மீட்டனர்.


