
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இன்று உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும்போட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடந்தது.
இந்த போட்டியில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமா, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார், திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார், தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சிப்பள்ளி காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 9வது பட்டாலியன் தளவாய் ஏசு சந்திரபோஸ், 12 வது பட்டாலியன் தளவாய் கார்த்திகேயன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மற்றும் வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் பிரிவுக்கான போட்டியில் வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகிய இருவரும் 2வது இடத்தையும், தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சிப்பள்ளி காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
அதே போன்று பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும்போட்டியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முதலிடத்தையும், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் 2வது இடத்தையும், திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முதலிடத்தையும், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் 2வது இடத்தையும், வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் பரிசு வழங்கி பாராட்டினார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்கள் தடுப்பு குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி தலைமையில் தூத்துக்குடி ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட தனிப்பரிவு காவல் உதவி ஆய்வாளர் நம்பிராஜன் மற்றும் ஆயுதப்படை தலைமைக் காவலர் ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் செய்திருந்தனர்.