ஆதிச்சநல்லூர் இரும்பு கேட்டை கடத்தி சென்று, உருக்கி விற்பனை செய்ய முயற்சி செய்தவர்களை போலீஸ் தனிப் படை மடக்கிப் பிடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது ஆதிச்சநல்லூர். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை வசம் உள்ள 114 ஏக்கரைச் சுற்றிக் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ரூபாய் 2 கோடி மதிப்பில் சுற்றி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது அந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக வேலி அமைப்பதற்காக ஆங்காங்கே பரம்பு சுற்றி பல்வேறு இடங்களில் இரும்பு கம்பிகள் போடப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 14 ந்தேதி 4 இரும்பு கம்பிகளையும் கடந்த 15 ந்தேதி 8 இரும்பு கம்பிகளையும் இரவோடு இரவாக மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதன் மொத்த எடை 700 கிலோவாகும். இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை சார்பில் சார்பில் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப் பதிந்தார். எஸ்.ஐ அனந்த முத்து ராமன், கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் மிகவும் பிரபலமாகப் பேசப்படும் ஆதிச்சநல்லூரில் பல கோடி ரூபாய் செலவில் நவீன அருங்காட்சியகம் அமைப்பதற்காக மத்திய அரசு செலவிடும் பணி துவங்க உள்ளது. இந்த நேரத்தில் இந்த திருட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய தொல்லியல் அலுவலர் எத்திஸ் குமார் தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் இடம் புகார் அளித்தார். அவர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஸ்ரீ வைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேஷ் ஆலோசனை பேரில் சப் இன்ஸ்பெக்டர் கருத்தையா , போலீஸ் நயினார் மற்றும் போலி சார் கொண்ட குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கம்பிகள் காணாமல் போன தினத்தில் அருகில் உள்ள கிராமங்களில் சென்ற வாகனங்களைக் கண்காணிக்கும் கேராக்களைச் சோதனையிட்டனர். அப்போது பேய் குளத்தில் இருந்த கண்காணிப்பு கமராவில் இரும்பு கம்பிகளுடன் சென்ற வாகனத்தினை கண்டுபிடித்தனர். பின் அந்த வாகனம் செல்லும் வழியைப் பின்பற்றி திசையன் விளையில் உள்ள கமராவில் பதிவான வாகனத்தின் உரிமையாளரைத் தேடிக் கண்டுபிடித்தனர்.
அப்போது இரண்டு வாகனத்தில் வந்து இரண்டு நாளில் கிரில் கேட்டை கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து திசையன் விளை முதுமொத்தன் மொழி ராஜா மகன் உதயகுமார் (32), இடையன் குடி தங்கதுரை மகன் சுபாஷ் (23) மகாதேவ புரம் சந்திரன் மகன் தங்கபாண்டி(28), உவரி ஆர்தர் மகன் பட்டீஸ்வரன்(29) உள்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். உதயகுமார் மற்றும் சுபாஷ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கடத்த பயன்படுத்திய இரண்டு மினிலாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் சிறு சிறு கம்புகளாகக் கேட்டை உடைத்து இட்ட மொழியைச் சேர்ந்த சேர்மத்துரை மகன் அருள் ராஜ்(34) இடம் விற்று உள்ளனர். அவர் இதை உருக்கி இரும்பு கட்டியாக வைத்திருந்தார். அந்த இரும்பு கட்டியை போலி சார் கைது செய்து அருள் ராஜை விசாரித்து வருகிறார்கள்.
மேலும் இந்த திருட்டுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் இரண்டு ஷிப்ட் காவலர்கள் போடப்பட்டுள்ளது. செய்துங்கநல்லூர் போலீசார் புறக்காவல் நிலையம் மூலமாக ஆதிச்சநல்லூர் பரம்பை இரவு பகலாகக் கண்காணித்துவருகின்றனர்.
இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிப்படை அமைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்த போலி சாரை எஸ்.பி.ஜெயக்குமார் உள்பட போலி சார் பாராட்டினர்.¬


