தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் பேராயர் ராபர்ட் கால்டுவெல் 133வது நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாநகர பள்ளிகளை சேர்ந்த 55 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்ககான பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் .ஸ்டேன்லி வேதமாணிக்கம் தலைமை வகித்து வரவேற்றார். கட்டுரைப் போட்டியில் பிரிவு 3இல் கால்டுவெல் பள்ளி மாணவர் தேவகிருபை முதலிடமும், எக்ஸன் பள்ளி மாணவர் இன்பெண்ட் இரண்டாமிடம் பிடித்தனர்.
பிரிவு 2இல் ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி ரக்ஷிதா முதலிடமும்,அலாய்சியஸ் பள்ளி மாணவி கௌசல்யா இரண்டாமிடம் பிடித்தனர். பிரிவு 1 இல் சிவந்தி ஆதித்தனார் பள்ளி மாணவி சிந்துஜாமுதலிடமும் அரசு மேல்நிலைப் பள்ளி சாமுவேல்புரம் மாணவர் தருண் இரண்டாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணய பரிசுகளை பள்ளியின் முன்னாள் மாணவரும், நட்டாத்தி ஊராட்சி மன்றத் தலைவருமான பண்டாரம், முன்னாள் மாணவர்கள் சங்க பொறுப்பாளர்கள் முத்து மாணிக்கம், மனோகர், மற்றும் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ் ஆகியோர் வழங்கி பாராட்டினர். விழா நிறைவில் பள்ளி தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன் நன்றியுரை வழங்கினார்.


