தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் தேசிய விண்வெளி தினம் கடைபிடிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு வானவியல் பற்றியும் இந்திய விண்வெளி துறையின் இமாலய சாதனைகள் சந்திராயன் 1,2,3 குறித்தும் டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் எழிலன் விளக்கம் அளித்தார். வானவியல் செயல்பாடுகள், நிழல் இல்லா நாள், மாணவர்களுக்கு டெலஸ்கோப்பில் பார்க்கும் பயிற்சிகளை தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் சார்பில் முத்துசாமி அளித்தார்.
ஆசிரியர்கள் ரமா, பாலசுந்தர கணேசன், மரகத வள்ளி பங்கேற்றனர் அங்காள ஈஸ்வரி ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி ஏற்பாடு செய்து இருந்தார்.


